தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சென்னையில் இளம்பெண் மருத்துவர் தற்கொலை - 23 Year Old Young Women Doctor NEET aspirant dies by suicide in TN's Namakkal

நாமக்கல்லைச் சேர்ந்த இளம்பெண் மருத்துவர் சென்னையில் தனது அறையில் தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தற்கொலை எண்ணத்தைக் கைவிடுங்கள்
தற்கொலை எண்ணத்தைக் கைவிடுங்கள்

By

Published : Jan 13, 2022, 10:56 PM IST

நாமக்கல்/சென்னை:நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகா (23), 2015 முதல் 2021ஆம் ஆண்டு வரையில் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து முடித்த இளம் மருத்துவர் ஆவார். இவர், வேப்பேரி அடுத்துள்ள சூளை, நாராயணகுரு சாலையில் உள்ள இவாஞ்சலின் பெண்கள் தங்கும் விடுதியில் அறை எண் எஃப்.5இல் தங்கி மருத்துவத் துறையின் முதுநிலை படிப்புக்காக நீட் தேர்வுக்குத் தயாராகிவந்துள்ளார்.

இவருடன் தங்கியிருந்த மற்ற இரண்டு மருத்துவக் கல்லூரி மாணவிகள் பொங்கலை முன்னிட்டு ஊருக்குச் சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று (ஜனவரி 12) மதியம் சாப்பிட்டுவிட்டு தனது அறைக்குச் சென்ற கார்த்திகா இன்று (ஜனவரி 13) மாலை வரை வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி காப்பாளர் நீண்டநேரமாக அறையைத் தட்டியுள்ளார்.

பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கார்த்திகா தற்கொலையில் இறந்த நிலையில் இருந்தார். உடனடியாக விடுதி காப்பாளர் காவல் துறைக்குத் தகவல் அளித்ததன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வேப்பேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் பிணவறைக்கு அனுப்பிவைத்தனர்.

தற்கொலை எண்ணத்தைக் கைவிடுங்கள்

மேலும், தற்கொலை செய்துகொண்ட மருத்துவர் கார்த்திகா, தனது சாவுக்கு யாரும் காரணம் அல்ல என எழுதிவைத்த கடிதத்தை காவல் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர். இளம் பெண் மருத்துவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து வேப்பேரி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மாணவனை காதலித்த பெண் ஆசிரியர் போக்சோவில் கைது

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details