திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் 14 வயது சிறுமி, வீட்டின் அருகில் உள்ள வயலுக்குப் புல் அறுப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர், புல் அறுத்துக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
நன்னிலம் அருகே 20 இளைஞர் போக்சோவில் கைது - Nannilam POCSO case
நன்னிலம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்.
இளைஞர் போக்சோவில் கைது
இது குறித்து சிறுமியின் தாயார் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இளைஞரைக் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க:இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் கொலை வழக்கு - தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது