தலைமைச் செயலகத்திற்கு பின்புறம் உள்ள ராணுவ முகாமில் கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணி இன்று காலை நடந்தது. அன்னை சத்யா நகரைச் சேர்ந்த வெங்கடேஷ், சந்தோஷ், ராஜா, மணிவண்ணன், பன்னீர் செல்வம் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராமல் விஷவாயு தாக்கி 5 தொழிலாளர்களும் மயங்கினர். இதையடுத்து கோட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து மீட்புப் படை வீரர்கள் விரைந்து வந்து, 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சந்தோஷ், ராஜா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பின்னர் இருவரின் உடல்களும் கூராய்விற்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. விஷவாயு தாக்கி மயக்கமுற்ற மற்ற மூவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய 5 பேரும் அழைத்து வரப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வந்தவர்களிடமும், ராணுவ முகாமில் உள்ள அதிகாரிகளிடமும் கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:தாய் வெட்டிக்கொலை; மகள் படுகாயம்! தலைநகரில் ரவுடிகள் வெறிச்செயல்!