தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

பவானி ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு: மற்றொரு இளைஞர் உயிருடன் மீட்பு! - ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர் செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்த வேளையில், அவரை காப்பாற்ற சென்றவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

2 school boys drowned in river near erode
2 school boys drowned in river near erode

By

Published : Feb 7, 2021, 11:06 PM IST

ஈரோடு: பவானி ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

பவானிசாகர் அடுத்த கஸ்தூரி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது கல்லூரி நண்பர்களான அவிநாசியைச் சேர்ந்த பால மணிகண்டன், மாரிமுத்து ஆகியோர் இன்று கஸ்தூரி நகர் வந்துள்ளனர். இவர்கள் பகுடுதுறை பவானி ஆற்றில் குளிக்க சென்றனர். ஸ்ரீதருடன் அவர் உறவினரான 11ஆம் வகுப்பு மாணவர் புவனேஷ்குமாரும் குளிக்க சென்றார்.

இவர்கள் குளித்து கொண்டிருந்தபோது பள்ளி மாணவர் புவனேஷ்குமார் பாறை மீது நின்று செல்போனில் செல்பி எடுத்துபோது தவறி ஆற்றில் விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்ற ஸ்ரீதர் ஆற்றில் குதித்தார். அப்போது இருவரும் நீரில் மூழ்கினர். அப்போது அங்கிருந்த பாலமணிகண்டன், மாரிமுத்து ஆகியோர் நீரில் தத்தளித்த இருவரையும் காப்பாற்ற ஆற்றில் குதித்தனர்.

இதில் ஸ்ரீதரை மாரிமுத்து மீட்டு வந்தார். புவனேஷ்குமாரை மீட்க சென்ற பாலமணிகண்டனும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதையடுத்து நம்பியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் மாயமான பள்ளி மாணவர் புவனேஷ்குமார், பாலமணிகண்டனை தேடினர்.

சுமார் 2 மணி நேரத்துக்கு பின் புவனேஷ்குமார், பாலமணிகண்டன் ஆகியோர் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து பவானிசாகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details