பெங்களூரு: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் தொழிற்நுட்ப வல்லுநராக பணியாற்றிவருகிறார்.
இவருக்கு நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அவரது வீட்டுக்கு சென்ற போது அங்கு இரண்டு நைஜீரியர்கள் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் பனாஸ்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து இரண்டு நைஜீரியர்களையும் கைதுசெய்தனர்.
அவர்கள் பெயர் அபுஜி உபாக்கா மற்றும் டோனி ஆகும். இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் நைஜீரியர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதையும் படிங்க : மைசூர் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: 6ஆவது நபர் கைது