தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

இருவேறு சாலை விபத்துகள்: இருசக்கர வாகனங்களில் சென்ற இருவர் உயிரிழப்பு! - accident news

வேலூர் மாவட்டத்தில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

2 causalities in two accidents
2 causalities in two accidents

By

Published : Feb 24, 2021, 9:40 PM IST

வேலூர்: மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் படவேடு இரத்தினபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உலகநாதன்(30). ராணுவ வீரரான இவருக்குநான்கு வயதில் ரோகித் என்ற மகன் உள்ளார். காலனி விழாவிற்காகப் பிப்ரவரி 21ஆம் தேதி சொந்த ஊரான வேலூருக்கு வந்துள்ளார்.

அப்போது பிப்ரவரி 22ஆம் தேதி பென்னாத்தூர் உள்ள அவரது மாமியார் வீட்டிற்குச் சென்றுவிட்டு, இரவு படவேடு நோக்கி சென்றபோது கேசவபுரம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், தலையில் படுகாயமடைந்த அவர், வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (பிப். 24) காலை உயிரிழந்தார். வேலூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல மற்றொரு விபத்தில் வேலூர் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (25) சென்ற இருசக்கர வாகனத்தின் மீது, தனியார் பேருந்து மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இவர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தவர். இவரின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details