சென்னை:ஐ.சி.எஃப். பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். காணாமல்போன சிறுமி, தனக்கு ஷேர்சாட் மூலம் பழக்கமான 21 வயது இளம்பெண்ணை அவரது வீட்டில் இரண்டு வார காலம் தங்கவைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த 21 வயது பெண்ணை அழைத்துச் செல்ல இன்று காலை அவரது மாமா ஆட்டோவில் வந்துள்ளார். அப்போது காணாமல்போன சிறுமி, வழியனுப்பச் சென்றிருக்கிறார். வழியனுப்பச் சென்ற சிறுமி வெகுநேரமாகியும் வரவில்லை.