தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

கரோனா ஊரடங்கு: ஈரோட்டில் 15.000 வாகனங்கள் பறிமுதல்! - 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்

ஈரோடு: ஊரடங்கை மீறி சாலையில் சுற்றி திரிந்தவர்களின் 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 52 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. தங்கதுரை தெரிவித்துள்ளார்.

15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்
ஈரோட்டில் 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்

By

Published : Jun 5, 2021, 8:13 PM IST

ஈரோடு மாவட்டத்தில் கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்டத்தின் பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. தங்கதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது,

"கரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த தமிழ்நாடு அரசு அறிவித்த ஊரடங்கு வரும் ஜூன் 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

ஊரடங்கை நடைமுறைபடுத்தும் வகையில் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கபட்டு சாலையில் சுற்றிதித் திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்பட்டு வருகிறது.

கரோனா ஊரடங்கு: ஈரோட்டில் 15.000 வாகனங்கள் பறிமுதல்!

மாவட்டத்தில் 13 நிலையான சோதனைச் சாவடிகளும், 42 தற்காலிக சோதனைச் சாவடிகளிலும் வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் மருத்துவமனை, மருத்துவபரிசோதனைக் மையங்கள் அதிகளவில் இருப்பதால் மருத்துவக் காரணங்கள் தவிர தேவையின்றி வரும் அனைத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக 15ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 52 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணியாத நபர்கள் மீது 10 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து மருத்துவக் காரணங்களைத் தவிர, தேவையின்றி செல்லும வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details