விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே 15 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. திடீரென அந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனை சென்று பரிசோதித்த போது அந்தச் சிறுமி ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் அளித்த தகவலின் அடிப்படையில், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 17 வயது சிறுவன் மீது அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதியப்பட்டது.