தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியிலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் தில்லை நாகராஜன், முறப்பநாடு காவல் ஆய்வாளர் பாஸ்கரன் உதவியோடு தீவிர வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை வழிமறித்து சோதனை நடத்தியதில், அதில் 14 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது.
கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் இதைத்தொடர்ந்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் அவற்றை கைப்பற்றினர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து லாரியில் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த சிபு, வல்லநாடு பகுதியை சார்ந்த பூவையா, திருநெல்வேலியை சார்ந்த மைக்கேல் ஆகிய 3 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு உதவிய லாரியின் உரிமையாளரை குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ராகி பிஸ்கட்டில் புழுக்கள்... உணவு பாதுாப்பு அலுவலர்கள் சோதனை