சென்னை:கொருக்குப்பேட்டையில் நேற்று இரவு 11 மணியளவில் சென்ட்ரல் நோக்கி செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் ரயில்வே காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தண்டவாளத்தின் அருகில் சந்தேகத்திற்க்கிடமாக ஒரு பை கிடந்தது.
இதை பார்த்த ரயிவே காவல் துறையினர் அந்த பையை எடுத்து சோதனை செய்தனர். அதில்,14 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.