காஞ்சிபுரம் மாவட்டம்காலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (52). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான கணபதி குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பினார்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் 125 சவரன் தங்கம் கொள்ளை - காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் ரூ.50 லட்சம் மதிப்புடைய 125 பவுன் தங்க நகைகள், ரூ. 20 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
![முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் 125 சவரன் தங்கம் கொள்ளை முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் 125 சவரன் தங்க நகைகள், ரூ.20லட்சம் பணம் கொள்ளை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16210574-thumbnail-3x2-theft.jpg)
முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் 125 சவரன் தங்க நகைகள், ரூ.20லட்சம் பணம் கொள்ளை
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்புடைய 125 சவரன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அதன்பின் அவர் மாகறல் போலீசாருக்கு புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:மயிலாடுதுறையில் 54 சவரன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி திருட்டு