சென்னை: பல்லாவரம் அடுத்த பம்மல் இந்திரா நகரைச் சேர்ந்த ஜக்ரியா அப்பாஸ், அமீதா தம்பதியின் 10 வயது மகள் தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
பக்கத்து வீட்டில் உள்ள சிறுவர்களுடன் நேற்று (ஆகஸ்ட் 3) விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, பின்னர் தான் கடைக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நேரத்தில், வேலைக்கு சென்று திரும்பிய பெற்றோர் மகளை காணவில்லை எனத் தேடியுள்ளனர்.