திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில் வசித்துவருபவர் பிரபாகரன் (37). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்.
இவரது மனைவி கனிமொழி, மகள் ரக்ஷனா, மகன் முகுந்தகுமார் ஆகியோர் நேற்று இரவு வீட்டு வராண்டாவில் படுத்து தூங்கினர்.
இன்று காலை எழுந்து பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் படுக்கை அறைகளில் இருந்த இரண்டு பீரோக்களை உடைத்து அதிலிருந்த செயின், நெக்லஸ், கம்மல், மோதிரம் உள்ளிட்ட 10 சவரன் தங்க நகைகளும், சுமார் ஒரு கிலோ எடையுள்ள கொலுசு உள்ளிட்ட வெள்ளி நகைகளும், ரூ.16,000 ரொக்கப் பணமும் கொள்ளையடித்துச் சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் செல்லும் அவசரத்தில் இரண்டு குத்துவிளக்குகள், வெள்ளி கிண்ணங்களை மெத்தை மேல் போட்டுவிட்டுச் சென்றிருந்தனர்.