தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

துரைமுருகனை புலம்பவிட்டு "ஜூ" காட்டிய ராமு! - KATPADI

வேலூர்: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறும்வரை இருக்கையின் நுணியில் அமர வைத்து, புலம்ப விட்டவர் ராமு. யார் அவர்...!

துரைமுருகன், ராமு
duraimurugan, ramu

By

Published : May 3, 2021, 7:49 PM IST

நொடிக்கு நொடி பரபரப்புடன்

பழம்பெரும் கட்சியான திமுகவில் உயரிய பொறுப்பான பொதுச் செயலாளர் பதவியை வகிப்பவர் துரைமுருகன். கடந்த 60 ஆண்டு காலம் அண்ணா, கலைஞர் ஆகியோரிடம் அரசியல் பழகியவர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் 11 முறை களம் கண்ட துரைமுருகன், 9 முறை காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு 7 முறை வென்றுள்ளார். இம்முறை 10-வது முறையாக, இத்தொகுதியில் அவர் போட்டியிட்டார்.ஏழு முறை தொடர்ந்து ஒரே தொகுதியில் வென்றவர்.

இப்படி பல பெருமிதங்களைக் கொண்ட துரைமுருகனை, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் இறுதி வரை இருக்கையின் நுணியில் அமர வைத்துள்ளார் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராமு.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தைச் சேர்ந்தவர் ராமு (48). பொறியியல் பட்டதாரியான இவருக்கு ஒரு மகன், ஒரு மகள்கள் உள்ளனர். விவசாயமே பிரதான தொழில். இவர், இதற்கு முன் குடியாத்தம் தாலுகா கொண்டசமுத்திரம் ஊராட்சியில் தலைவராக இருந்துள்ளார். குடியாத்தம் ஒன்றிய செயலாளராகவும், வேலூர் கிழக்கு மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளராகவும், கடந்த 2015 - 16ஆம் ஆண்டுகளில் வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளராகவும் பதவி வகித்தார்.

மக்களுடன் நெருங்கி பழகியவர்

தற்போது குடியாத்தத்தின் ஒன்றிய செயலாளராகவும், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் உள்ளார். கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி பொறுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். மக்களோடு மக்களாக நெருங்கிப் பழகக்கூடியவர். காட்பாடி தொகுதியில் ஆள் பலம் இன்றியும், சொந்த கட்சியினர் ஆதரவு குறைவாக இருந்தும், தனது பகுதி அதிமுக ஆட்களை வைத்து தேர்தல் பணியில் ஈடுபட்டார்.

காட்பாடி துரைமுருகனை கதறவிட்ட ராமு!

தொகுதியும்; துரைமுருகனும்!

திருவலம், பொன்னை பகுதிகளில் உள்ள கிராமங்களில் தீவிரப் பரப்புரையை மேற்கொண்டார். துரைமுருகன் தொடர்ந்து வெற்றி பெற்றாலும், தொகுதி பக்கம் வருவதில்லை; இதுவரை தொகுதிக்கு எதுவும் குறிப்பிடும் படியாக செய்யவில்லை என்கிற குறை காட்பாடி பகுதி மக்களிடம் இருக்கிறது.

இவற்றை முன்வைத்தும், இளைஞனாகிய எனக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் படியும் முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் கண்டார் ராமு. தெலுங்கு சமுதாயத்தைச் சேர்ந்த ராமுவிற்கு சமுதாய ஓட்டுக்கள் சுமார் 20 விழுக்காட்டிற்கு கணிசமான அளவில் கிடைத்தது.
தேர்தல் தொடங்கியதில் இருந்தே காட்பாடி தொகுதி அதிகாரிகள் தரப்பில் குறி வைக்கப்பட்டது. ஏற்கனவே வாக்காளர்களுக்குப் பணப் பரிமாற்ற புகாரில் சிக்கியதால் கூடுதல் கவனத்துடன் இந்தத் தொகுதியை சல்லடை போட்டு அலசினர் தேர்தல் அலுவலர்கள். கடுமையான வெயில், கரோனா பரவல் சூழலிலும், இறுதி வரை களத்தில் பரப்புரை செய்தார் ராமு.

ரோஜாவை நோக்கும் காட்பாடி நாயகன்!

பிரசாரத்தில் தொய்வு

ஆனால், துரைமுருகனின் பிரச்சாரத்திலோ தொய்வு ஏற்பட்டது. மார்ச் 30ஆம் தேதியே பிரச்சாரத்தை முடித்தார் துரைமுருகன்‌. பிரச்சாரம் முடிவடைய கூடிய இறுதி நான்கு நாட்கள் அவருக்காக மகன் கதிர் ஆனந்த், மருமகள் சங்கீதா ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டனர்.
தேர்தலின் தொடக்கத்தில் இருந்தே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று அதிமுக - அமமுக கட்சிகள் இணைப்பு.

கதிர் ஆனந்த், அவரது மனைவி

ஆனால் இறுதி வரை சத்தமின்றி போனதால் வாக்குகள் பிரிந்தன. இந்தச் சூழலில் காட்பாடி தொகுதியிலும், அமமுகவினருக்கு 1,040 வாக்குகள் கிடைத்தன. இந்த வாக்குகள் அதிமுக வேட்பாளருக்கு சென்றிருந்தால் இன்று காட்பாடி தொகுதியில் அதிமுக கொடி பறந்திருக்கும்.
இதுதவிர துரைமுருகன் மீது காட்பாடி தொகுதி மக்களிடையே இருந்த அதிருப்தி, அதிமுக வேட்பாளர் ராமு மீது எழுந்த நம்பிக்கை, புதியவரைத் தேர்தெடுக்க வேண்டும்; மாற்றத்துக்கான தேவை உள்ளிட்ட பல காரணிகள் இறுதி வரை துரைமுகனுக்குச் சவாலாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: காட்பாடியில் மீண்டும் பாய்ந்த துரைமுருகன் மின்னல்!

ABOUT THE AUTHOR

...view details