தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உள்ளாட்சித் தேர்தல் 2019 - நான்கு மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் வெளியீடு!

வேலூர்: உள்ளாட்சித் தேர்தல் 2019க்கான வாக்காளர் வரைவுப் பட்டியல் தருமபுரி, திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர்.

By

Published : Oct 4, 2019, 11:27 PM IST

District Collectors Release Voter List

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று வெளியிடப்பட்டது. இந்த வாக்காளர் வரைவுப் பட்டியலை அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவரும் இணைந்து வெளியிட்டனர். இதையடுத்து, " வேலூர் மாவட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கு மொத்தம் 5 ஆயிரத்து 75 வாக்குச்சாவடி மையங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், இதில் ஊரகப் பகுதிகளில் 3 ஆயிரத்து 812, நகர்ப்புற பகுதிகளில் 267, நகராட்சிகளில் 623, மாநகராட்சியில் 373 வாக்குச் சாவடிகள் பயன்படுத்தப் போவதாகவும், வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 31 லட்சத்து 4 ஆயிரத்து 514 வாக்காளர்கள் இருப்பதாகவும்" மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் 2019ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி வெளியிட்டார். இந்த மாவட்டத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண் - 9,79,457; பெண் - 10,09,880; இதர - 95 என மொத்தம் 19,89,432 ஆகும். இதில் உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சிகளில் ஆண் - 1,17,519; பெண் - 1,26,934, இதரர் - 14, என மொத்தம் 2,44,467; பேரூராட்சிகளில் ஆண் - 56711, பெண் - 61,050; இதரர் - 3, என மொத்தம் 1,17,764; ஊராட்சிகளில் ஆண் - 8,05,227; பெண் - 8,21,896, இதரர் - 78, என மொத்தம் 16,27,201 வாக்காளர்களும் உள்ளனர். இதனால் உள்ளாட்சித் தேர்தல் - 2019 முன்னிட்டு நகராட்சிகளில் 257, பேரூராட்சிகளில் 164, ஊராட்சிகளில் 3520, ஆக மொத்தம் 3,941 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்படுகிறது.

நான்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு

இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் அதில் ஆண் வாக்காளர்கள் 10 லட்சத்து 7 ஆயிரத்து 627, பெண் வாக்காளர்கள் 10 லட்சத்து 32 ஆயிரத்து 819, இதர வாக்காளர்கள் 355 என மொத்தம் 20 லட்சத்து 40 ஆயிரத்து 801 வாக்காளர்கள் உள்ளனர். இம்மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு மாநகராட்சி, நான்கு நகராட்சிகள், ஐந்து பேரூராட்சிகள், 16 ஊராட்சி ஒன்றியங்களில் வார்டு வாரியாக வாக்காளர்கள் பிரிக்கப்பட்டு அனைத்து வார்டு வாரியாக புதிய வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தருமபுரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர் விழி வெளியிட்டார்.தர்மபுரி நகராட்சியில் 33 வார்டுகள், 10 பேரூராட்சிகளில் 159 வார்டுகளும், பத்து ஊராட்சி ஒன்றியங்களில் 2,343 வார்டுகள் என மொத்தம் 2,535 வார்டுகள் மாவட்டத்தில் உள்ளது.

2,535 வார்டுகளை உள்ளடக்கிய பகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 15 ஆயிரத்து 385 பேரும், பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 94 ஆயிரத்து 143பேரும், மூன்றாம் பாலினத்தவர் 124 பேர் என மொத்தம் 12 லட்சத்து 9 ஆயிரத்து 652 வாக்காளர்கள் மாவட்டத்தில் உள்ளனர்.

மேலும், இந்த வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கோ அல்லது ஏதேனும் திருத்தம் மேற்கொள்ளவோ விரும்புவோர் சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் முறையிடலாம் எனத் தெரிவித்தனர்.

உள்ளாட்சி தேர்தல் 2019

இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details