வேலூர்: மேல்அரசபட்டு காப்புக்காடு பகுதியில் ரோந்தில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட ஒடுக்கத்தூர் வனச்சரக வனத்துறையினர் நள்ளிரவில் சந்தன மரம்வெட்டி கடத்த முயன்றவர்களில் ஒருவரை இன்று (ஆக.29) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் தொங்கு மலைபகுதியைச்சேர்ந்த பிரகாஷ்(21) என்பதும் அவரிடமிருந்து, சுமார் 100 கிலோ எடையுள்ள சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் நடந்த தொடர் விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.