தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரூ.883 கோடியில் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி பணிகள்! - திடக்கழிவு மேலாண்மை திட்டம்

வேலூர்: ரூ.883 கோடியில் மதிப்பில் குடிநீர், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவைகள் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

commisioner sivasubramaniyan

By

Published : Jun 26, 2019, 7:45 AM IST

வேலூர் மாவட்டத்தில் நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து வேலூர் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்ததாவது,

"வேலூரில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 34 பணிகள் ரூ.883 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் அனைவருக்கும் தினசரி 135 லிட்டர் தண்ணீர், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்துவதன் மூலம் மாநகரத்தில் சேரும் குப்பைகளின் அளவு பெருமளவு குறைந்துள்ளது, 46 கோடி செலவில் வேலூர் புதிய பேருந்து நிலையம் சீரமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது. இதற்கான தொழில்நுட்ப ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

வேலூர் கோட்டையில் உள்ள அகழியை தூர்வாரி சீரமைக்கும் பணி நடக்கிறது. மேலும் பாலாற்றில் குப்பைகளை கொட்டக்கூடாது என மாநகராட்சி ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம் அதையும் மீறி குப்பைகள் கொட்டப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது 60 வார்டுகள் மாநகராட்சியில் உள்ளன இதில் 20 வார்டுகளில் மட்டும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஐந்து விழுக்காடு பணிகள் நடைபெற்றுள்ளது. 2021ஆம் ஆண்டிற்குள் பணிகள் முழுமையடையும். இதுவரை 212 கோடி நிதி பெறப்பட்டுள்ளது மீதமுள்ள நிதி படிப்படியாக பெறப்பட்டு அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரூ.883 கோடியில் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details