வேலூர் அடுத்த பெருமுகை சென்னை-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து தருமபுரி நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசுப் பேருந்தின் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேலூர் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது.
லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் - வேலூர் அடுத்த பெருமுகை அரசு பேருந்து விபத்து
வேலூர்: லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி லாரியின் மீது மோதியதால் பலத்த சேதம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் ஓடிச் சென்று பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து சத்துவாச்சாரி காவல்துறையினரும் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் அரசுப் பேருந்து ஓட்டுநர் பேருந்தின் முன் பகுதியில் சிக்கிக்கொண்டார். அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களில் பெங்களுரைச் சேர்ந்த அனிந்தா மெலஹெஞ்சா (24) சிகிச்சை பலனின்றி உயிரழந்தார். விபத்து குறித்து சத்துவாச்சாரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, பேருந்து ஓட்டுநர் யார் என்பது குறித்தும் விபத்தில் காயமடைந்தவர்களின் விபரங்கள் குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.