தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஒரு டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்! - வேலூர் அரிசி கடத்தல்

வேலூர்: ஆம்பூர் ரயில் நிலையத்தில் வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரேஷன் அரிசி பறிமுதல்

By

Published : Nov 21, 2019, 7:01 PM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து மைசூர் செல்லும் மைசூர் ரயிலில் சோதனை நடப்பட்டது அந்த ரயிலின் கடைசி பெட்டியில் 15 மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டறியப்பட்டது. அனைத்து மூட்டைகளையும் சோதனை செய்த போது அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

அதையடுத்து அனைத்து மூட்டைகளையும் பறிமுதல் செய்த ரயில்வே காவல்துறையினர் வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திராவிடம் ஒப்படைத்தனர். அரிசியை இடை மதிப்பீடு செய்த அலுவலர் அதன் மொத்த எடை 1 டன் இருப்பதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அரிசி மூட்டைகளை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

1 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்!

இதையும் படியுங்க: அரிசிக்கு பதில் பணம் வழங்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details