வேலூர் மக்களவைத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில் வேலூர் மக்களவைத் தேர்தலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
வேலூர் அஞ்சல் வாக்குப்பதிவு; காவல் துறையினர் வாக்களிப்பு! - தபால் வாக்குபதிவு
வேலூர்: மக்களவைத் தொகுதியில் இன்று காலை தொடங்கிய அஞ்சல் வாக்குப் பதிவில் காவலர்கள் வரிசையில் நின்று வாக்களித்து-வருகின்றனர்.
![வேலூர் அஞ்சல் வாக்குப்பதிவு; காவல் துறையினர் வாக்களிப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3976006-thumbnail-3x2-postal.jpg)
vellore police casted postal votes
இதில் வேலூர் தொகுதிக்குட்பட்ட 1,100 காவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் தொடங்கிய அஞ்சல் வாக்குப்பதிவு அரசியல் கட்சியினர், மாவட்ட தேர்தலை நடத்தும் அலுவலர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
வேலூர் அஞ்சல் வாக்குப்பதிவில் காவல் துறையினர் வாக்களிப்பு!