வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கதிரமங்கலம் ஊராட்சி நேருஜி நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு கடந்த எட்டு மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதனால் அப்பகுதி ஊராட்சி செயலாளரை கண்டித்து சி.கே. ஆசிரமம் பகுதியிலிருந்து புதுப்பேட்டை செல்லும் சாலையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்கள்கூறுகையில், தங்கள் பகுதியிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள விவசாய கிணற்றிலிருந்து குடிநீர் எடுத்து வந்து சமையல் செய்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப காலதாமதம் ஆவதோடு சரியான நேரத்திற்குள் கூலி வேலைக்கு செல்ல முடியாமல் போவதாக கூறினர்.