தமிழ்நாட்டில் கோடை வெயில் சில பகுதிகளில் சதத்தை தாண்டி வருகின்றது. இதில் பிற மாவட்டங்களை காட்டிலும் வேலூர் மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இங்கு அதிகபட்சம் 110 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகியுள்ளது. வெயில் சதத்தையும் தாண்டி அதிகமாக கொளுத்துவதால், மக்கள் வெளியே வரக்கூட அச்சமடைகின்றனர். அதிலும், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
வேலூரில் சதமடிக்கும் வெயில்: மக்கள் கடும் அவதி இதற்கிடையில் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் வசதி செய்து கொடுக்கப்படாததால் மக்கள் பல மணி நேரம் வெயிலில் காத்திருந்து பஸ் ஏறும் அவலமும் நிகழ்கிறது. குறிப்பாக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைபாஸ் சாலை ஓரம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் வெயிலில் நின்றபடி பஸ் ஏறுகின்றனர்.
இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர வேண்டும் மற்றும் பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள் மார்க்கெட் போன்ற பொது இடங்களில் தண்ணீர் மோர் பந்தல்கள் அமைத்து தர வேண்டும் எனவும் வேலூர் மாவட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்