தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சசிகலாவை வரவேற்க ஹெலிகாப்டரில் மலர் தூவ அனுமதி கோரி மனு! - ஹெலிகாப்டரில் மலர் தூவ அனுமதி கோரி மனு

வேலூர்: சசிகலாவை வரவேற்க ஹெலிகாப்டரில் மலர் தூவ அனுமதி கோரி முன்னாள் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

சசிகலாவை வரவேற்க ஹெலிகாப்டரில் மலர் தூவ அனுமதி கோரி மனு!
சசிகலாவை வரவேற்க ஹெலிகாப்டரில் மலர் தூவ அனுமதி கோரி மனு!

By

Published : Feb 4, 2021, 5:38 PM IST

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு - பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

இருந்தபோதிலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த ஜனவரி 31ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா பெங்களூருவில் ஒரு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து, வரும் 8ஆம் தேதி சசிகலா பெங்களூருவிலிருந்து தமிழ்நாடு வரவுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று அறிவித்துள்ளார்

சசிகலாவை வரவேற்க ஹெலிகாப்டரில் மலர் தூவ அனுமதி கோரி மனு!

இந்நிலையில், தமிழ்நாடு வரவுள்ள சசிகலாவை வரவேற்க ஹெலிகாப்டரின் உதவியுடன் பூ தூவுவதற்கு அனுமதி வேண்டி முன்னாள் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க...சசிகலா வருகை திடீர் மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details