முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் ஆண்கள் சிறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கணவன் - மனைவி இருவரும் 15 நாள்களுக்கு ஒருமுறை வாட்ஸ்-அப் செயலி வழியே காணொலியில் பேசி வருகிறார்கள்.
இந்நிலையில், அவர் தனது குடும்பத்தினரிடம் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடந்த நவ.23ஆம் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். சிறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் முருகன் உண்ணாவிரதத்தை கைவிடவில்லை. அவரின் உடல்நிலையை வேலூர் சிறை நிர்வாக மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அவர் 19ஆவது நாளாக அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இதனிடையே, முருகனை சந்திக்க அவரது வழக்கறிஞர் புகழேந்தி பாண்டியன் இன்று(டிச. 14) வேலூர் சிறைக்கு வந்தார். முருகனின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறி சிறை நிர்வாகம் அவரை சந்திக்க அனுமதி மறுத்ததாக அறியமுடிகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய புகழேந்தி பாண்டியன், “சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுவரும் முருகனுக்கு இன்று 4 குளுக்கோஸ் பாட்டில்கள் ஏற்றப்பட்டுள்ளன. அவரது உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எழுந்து நடக்கக்கூட முடியாத சூழலில் முருகன் உள்ளதால், அவரை சந்திக்க முடியாது என சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்குறிஞரான என்னை சிறைக்குள் அனுமதிக்காததற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்.