வேலூர்:முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தொரப்பாடியில் உள்ள வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் முருகன். இவருக்கு கடந்த சில நாள்களாக பல் வலி ஏற்பட்டுள்ளது.
இதற்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென அவர் சிறைத்துறை அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
கோரிக்கையை ஏற்ற சிறைத்துறையினர் இன்று (ஜன.28) காலை 9 மணி அளவில் வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனைக்கு பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் முருகனை அழைத்து வந்தனர்.
அங்கு அவருக்கு பல் வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிகிச்சைக்கு பின் முருகன் மீண்டும் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க:AUS Open 2022: துள்ளிக் குதிக்கும் நடால்; பைனலுக்கு முன்னேற்றம்!