தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மு.க.ஸ்டாலின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி: கதிர் ஆனந்த்..! - கதிர் ஆனந்த்

வேலூர்: தேர்தலில் நான் பெற்ற வெற்றி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என மாவட்ட தேர்தல் அலுவலரிடம் அதிகாரப்பூர்வ சான்றிதழை பெற்றபின் கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

வேலூ

By

Published : Aug 9, 2019, 5:18 PM IST

ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற்ற வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தைவிட 8,310 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றார்.

இதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் பெற்றுகொண்ட கதிர் ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இந்தத் தேர்தலில் நான் பெற்ற வெற்றி திமுக தலைவர் ஸ்டாலினின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு காணிக்கையாக்குகிறேன்” என்றார். இந்த வெற்றியின் மூலம் மக்களவையில் திமுக எம்.பி.க்களின் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது.

தேர்தல் அலுவலரிடம் அதிகாரப்பூர்வ சான்றிதழைப் பெற்றுகொள்ளும் கதிர் ஆனந்த்

ABOUT THE AUTHOR

...view details