வேலூர்: மேல்மொணவூரை சேர்ந்தவர் சகாதேவன். இவர் பல ஆண்டுகளாக காளைகளை வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான சங்கீதா எக்ஸ்பிரஸ் என்னும் காளை கடந்த சில ஆண்டுகளாக வட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற எருது விடும் விழாக்களில் பங்கேற்று, முதல் பரிசை தட்டிச் சென்றது.
குறிப்பாக 2018ஆம் ஆண்டில் 21 இடங்களில் இக்காளை முதல் பரிசை வென்று, காளை பிரியர்கள் மற்றும் இளைஞர்கள், பொதுமக்களிடையே நீங்காத இடத்தைப் பெற்றது.