வேலூர் மாநகராட்சியில் தினக்கூலி ஒப்பந்த அடிப்படையில் சுகாதாரப் பணியாளர்கள், குடிநீர் பம்ப் ஆப்பரேட்டர்கள், திடக்கழிவு மேலாண்மை பணியாளர்கள் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்! - வேலூர் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூர்: ஆறு ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்காததைக் கண்டித்து மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4511196-thumbnail-3x2-protest.jpg)
vellore corporation contract_employees
வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்
இந்நிலையில், அவர்களுக்கு 2014ஆம் ஆண்டு மார்ச் முதல் ஊதிய உயர்வு வழங்கவில்லை என்று கூறி, இன்று அதனைக் கண்டித்து வேலூர் அண்ணா கலை அரங்கம் அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஊதிய உயர்வு வழங்கக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பகுஜன் தொழிற்சங்க பொதுச்செயலாளர் பாரதிதாசன் கலந்துகொண்டார்.