தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எருது விடும் விழா ரத்து: நடத்தக்கோரி இந்து முன்னணியினர் போராட்டம்! - வேலூரில் ரத்து செய்யப்பட்ட எருது விடும் விழா

வேலூரில் எருது விடும் விழாவினை மாவட்ட ஆட்சியர் ரத்துசெய்திருந்த நிலையில், விழாவினை நடத்தக் கோரி இந்து முன்னணியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எருது விடும் விழா
எருது விடும் விழா

By

Published : Jan 7, 2022, 6:34 PM IST

வேலூர்:தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், ஏனைய நாள்களில் இரவு நேர ஊரடங்கும் நடைமுறைப்படுத்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்திலும் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இச்சூழலைக் கருத்தில்கொண்டு வரக்கூடிய பொங்கல் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் எருதுவிடும் விழாவினை ரத்துசெய்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டிருந்தார்.

இந்து முன்னனியினர் போராட்டம்

இந்நிலையில், இன்று (ஜனவரி 7) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் எருதுவிடும் விழாவினை நடத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எருது விடும் விழா

ஜல்லிக்கட்டு காளைகளை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் அருகே நிறுத்தியும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த இந்து முன்னனியினர் மனு அளித்தனர். மனுவினைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், கரோனா தொற்று குறைந்தால் விழா நடத்துவது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: Cockfight: வெறும் கால்களுடன் சேவல் சண்டை நடத்த அனுமதி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details