திருவண்ணாமலை மாவட்டம் மேல் ஆரணி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை நவநீதம். இவர் இன்று வேலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து தனது வீட்டுக்குத் திரும்புவதற்காக ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
பட்டப்பகலில் மூதாட்டியிடம் சங்கிலி பறித்த பெண்ணை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்! - வேலூர்
வேலூர்: ஆம்பூர் பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் 4 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்த இளம்பெண்ணைப் பிடித்த பொதுமக்கள், அவரை காவல் துறையில் ஒப்படைத்தனர்.
அப்போது, பேருந்தில் ஏற முற்படும்போது சேலம் மாவட்டம் சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீனா என்பவர் மூதாட்டி கழுத்தில் இருந்த 4 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓட முயற்சித்துள்ளார். இதனையறிந்த பொதுமக்கள் அந்தப் பெண்ணை விரட்டிப் பிடித்து, காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வேலூரில் பேருந்து நிலையம் மற்றும் மக்கள் அதிக நடமாட்டமுள்ள பகுதியில் இது போன்று திருட்டு நடப்பதை தடுக்க காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.