திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடைபெறும். இந்தாண்டு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 178ஆவது மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் ஆந்திரா, கர்நாடகா எனப் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொள்ள வருகைதந்தன.
மருத்துவக் குழுவின் பரிசோதனைக்குப் பிறகு ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்துவிடப்பட்டன. இதில் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை குறைவான நேரத்தில் கடக்கும் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதனடிப்படையில் குறைந்த நொடியில் ஓடிய ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த டான் என்ற காளை முதல் பரிசையும், வன்னிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த காளை இரண்டாவது பரிசையும் என மொத்தம் 25 காளைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.