திருவண்ணாமலை : ஊசாம்பாடி ஏரிக்கரை பகுதியில் குடிசைகள் அமைத்து சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்துள்ளனர்.
இது குறித்து , வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில், துரிஞ்சாபுரம் வருவாய் ஆய்வாளர் சாயாஜி பேகம் , விஏஓ ஜெயக்குமார் ஆகியோர் நேற்று (ஜூன் 29) அங்கு சென்று பார்வையிட்டனர். ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்றுவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டனர் .
ஆக்கிரமிப்பு - மிரட்டல்
அப்போது, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக மல்லவாடி கிராமத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் ரகுநாதன் ( 49 ), சக்திவேல் ( 29 ) ஆகியோர் விஏஓ மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். குடிசையை அகற்றினால் உயிரோடு செல்ல முடியாது என மிரட்டல் விடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் உருட்டுக் கட்டையால் விஏஓ மற்றும் வருவாய் ஆய்வாளரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
விஏஓ, வருவாய் ஆய்வாளரை தாக்கிய பாஜக பிரமுகர் கைது இருவர் கைது
படுகாயமடைந்த விஏஓ மற்றும் ஆர்ஐ இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக விஏஓ ஜெயக்குமார் திருவண்ணாமலை தாலுகா காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் , ரகுநாதன் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர் .
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் தடுப்பூசி இல்லை - அமைச்சர் மா.சுப்ரமணியன்