வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நேற்று மாலை சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது பெரிய ரக வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த பெண் பலத்த காயத்துடன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து ஆம்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் விபத்தில் உயிரிழந்தவர், ஆம்பூர் அடுத்த மாதனூர் ராசம்பட்டியை சேர்ந்த ரவி என்பதும், மனைவியுடன் வேலை முடிந்து வீடு திரும்பியபோது இச்சம்பவம் நடந்துள்ளது என்பதும் தெரியவந்தது.
மனைவி கண் முன்னே கணவன் பலியான சோகம்; அதிரவைக்கும் சிசிடிவி காட்சி! - மனைவி கண் முன்னே கணவன் பலி
வேலூர்: ஆம்பூரில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில் மனைவி கண்முன்னே கணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![மனைவி கண் முன்னே கணவன் பலியான சோகம்; அதிரவைக்கும் சிசிடிவி காட்சி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3563630-thumbnail-3x2-accident.jpg)
VAN CRUSHED BIKE ONE DEAD THE OTHER INJURED
ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியில் சாலை கடக்க முயன்றபோது, வேலூரிலிருந்து ஊத்தங்கரை நோக்கிச் சென்ற பெரிய ரக வாகனம் மோதி அங்குள்ள தடுப்புச்சுவரின் மீது ரவி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மனைவி கண்முன் உயிரிழந்ததாக அறியப்பட்டது. இதனையடுத்து, உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக காவல்துறையினர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி கண் முன்னே கணவன் பலியான சோகம்; அதிரவைக்கும் சிசிடிவி காட்சி!