வேலூர் மாவட்டம், அணைகட்டு ஊசூரைச் சேர்ந்தவர் அஜித்குமார் என்ற இளைஞர் சஸ்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர். உயர் சாதி ஏழைகளுக்கு பத்து சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கோரிய மனுவை இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொடுக்க வந்துள்ளார்.
10% இட ஒதுக்கீடு வழங்ககோரி இளைஞர் தர்ணா! - வேலூர் கலெக்டர்
வேலூர்: உயர் சாதி ஏழைகளுக்கு பத்து சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இளைஞர் ஒருவர் தர்ணா
அங்கிருந்த காவல்துறையினர் அஜித்குமாரை அனுமதிக்காததால். ஆத்திரமடைந்த அவர் சாலையில் படுத்துக்கொண்டு ' உயர் சாதியினருக்கு பத்து சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும்' என்று கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
பின்னர் காவலர்கள் அவரை சமாதானம் செய்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் அழைத்து சென்றனர். அதன் அவர் மனுவை கொடுத்துவிட்டு அங்கிருந்து அமைதியாக திரும்பி சென்றார்.