தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தடுப்பை சேதப்படுத்திய இருவர் கைது - containment zone in vellore

வேலூரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பை சேதப்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.

vellore collector office
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

By

Published : Jan 9, 2022, 1:14 PM IST

வேலூர்: கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் வேலூர் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியான சைதாப்பேட்டை பாபு ராவ் தெருவில் கரோனா தொற்று அதிகரித்து காணப்பட்டது.

இதனால், அப்பகுதியை மையமாக வைத்து மேலும் தொற்று பரவாதிருக்க வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் பாபு ராவ் தெருவில் இரண்டு பகுதி தனிமைப்படுத்தப்பட்ட தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (27), தணிகைவேல் (47) ஆகியோர் மினி ஆட்டோவில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக தனிமைப்படுத்த அமைக்கப்பட்டிருந்த தடுப்பை உடைத்து சேதப்படுத்தி அகற்றி உள்ளே சென்றதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வேலூர் வடக்கு காவல் துறையினர் அவர்கள் இருவர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இதுபோன்று தொற்றுப்பரவலை தடுப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளை உடைத்து அகற்றினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ளிய நெடுஞ்சாலைத் துறை - கண்ணீர் விட்ட பொதுமக்கள்

ABOUT THE AUTHOR

...view details