வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த இலக்கிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவரது நிலத்தில், சிறிய அளவிலான சந்தன மரங்கள் வளர்ந்துள்ளன. இதனை அறிந்த கடத்தல்காரர்கள் நேற்று இரவு அம்மரங்களை வெட்டியுள்ளனர்.
வெட்டிய மரங்களைக் காரில் கடத்த முயன்றபோது, சத்தம் கேட்டு அங்கிருந்தவர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்துள்ளனர். இதனால் கோபமுற்ற கடத்தல்காரர்கள், திடீரென ஓடிச்சென்று காரில் ஏறிக் கொண்டு அன்பழகன் என்பவர் மீது காரை ஏற்றிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
#SaveSujith மீண்டு வா சுஜித்! - முதன்மை தகவல்கள் நேரலையில்
இதில் கால்கள் இரண்டும் பலத்த காயம்பட்ட நிலையில், அன்பழகன் கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அப்போது அருகே இருந்த சிலர், கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவரை மட்டும் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
கடத்தல் கும்பலைப் பிடிக்கச் சென்ற மக்கள்; கார் ஏற்றி கொல்ல முயற்சி! இதனையடுத்து, கந்திலி காவல் நிலையத்தில் கொள்ளையனை ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மூன்று பேரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.