வேலூர்: காட்பாடி பகுதியில் உள்ள குப்பத்தாமோட்டூர் கிராமத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் 1994ஆம் ஆண்டு முதல் அரசு வழங்கிய பட்டா நிலத்தில் வசித்து வருகின்றனர். இதில் ஒருவரான ஜீவா (52) என்ற பெண் அப்பகுதியில் வீடுகட்டி வாழ்ந்து வருகிறார்.
இவரது வீட்டைத் தாண்டி தான் அண்ணாமலை என்பவரது வீடும், நிலமும் உள்ளது. நீண்ட காலமாக இருளர் சமுதாய மக்கள் அங்கு வசிப்பது அவர்களுக்குத் தொந்தரவாக இருந்ததால் வீட்டை காலி செய்யும்படி பலமுறை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.
இச்சூழலில் நவ.06ஆம் தேதி காலை 7 மணியளவில் அண்ணாமலை, அவரது மகன்கள் வேலுமணி, வெங்கடேசன் ஆகிய மூவரும் சேர்ந்து ஜீவாவின் வீட்டின் முன் இருந்த மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். இதனை தடுக்கச் சென்ற பெண்ணை அடித்து கீழே தள்ளி திட்டி மிரட்டியுள்ளனர்.