தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பணப்பட்டுவாடாவால் சிறை சென்ற நடத்துநர்: பணியிடை நீக்கம்செய்த வேலூர் மண்டல போக்குவரத்துக் கழகம்! - Vellore district Flying Corps

வேலூர்: அணைகட்டு தொகுதியில் நேற்றிரவு (ஏப். 1) இருவரிடமிருந்து பறக்கும் படையினர் 17ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து கைதுசெய்தனர். இதில் கைது செய்யப்பட்ட நடத்துநரை பணியிடை நீக்கம்செய்து, வேலூர் மண்டல போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

பணப்பட்டுவாடாவால் சிறை சென்ற நடத்துநரை பணியிடை நீக்கம்செய்த வேலூர் மண்டல போக்குவரத்துக் கழகம்
பணப்பட்டுவாடாவால் சிறை சென்ற நடத்துநரை பணியிடை நீக்கம்செய்த வேலூர் மண்டல போக்குவரத்துக் கழகம்

By

Published : Apr 2, 2021, 10:41 PM IST

நேற்று முன்தினம் (மார்ச் 31) இரவு அணைகட்டு தொகுதி தெள்ளூர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க இருந்ததாக, தெள்ளூரைச் சேர்ந்த ராமமூர்த்தி (57), அலமேலுரங்காபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திபன் (51) ஆகியோரைப் பிடித்த பறக்கும் படையினர் அவர்களிடமிருந்து 17 ஆயிரம், திமுக வேட்பாளர் நந்தகுமாரிடமிருந்து கட்சி சின்னம் பொறித்த துண்டு பிரசுரங்களையும் பறிமுதல்செய்தனர்.

இது தொடர்பாக அரியூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட, அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த கார்த்திபன் (51) அரசுப் பேருந்து நடத்துநராக உள்ளார்.

பணப்பட்டுவாடாவால் சிறை சென்ற நடத்துநரை பணியிடை நீக்கம்செய்த வேலூர் மண்டல போக்குவரத்துக் கழகம்

பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு கைதாகி சிறை சென்றதால், நடத்துநர் கார்த்திபனை பணியிடை நீக்கம்செய்து, வேலூர் மண்டல போக்குவரத்துக் கழக அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 'ஏப். 4 வரை தேர்தல் பரப்புரை மேற்கொள்ளலாம் - சத்யபிரத சாகு'

ABOUT THE AUTHOR

...view details