வேலூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் விக்கிரமராஜா, “ கரோனா காலத்திற்கான வணிகர்களின் 6 மாத வட்டியை ரத்து செய்ய வேண்டும், உள்ளாட்சி நகராட்சி கடைகளின் 6 மாத கால வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, 2 மாத தள்ளுபடியை முதலமைச்சர் அறிவித்தார். ஆனால் அதனை ஏற்க வேலூர் மாநகராட்சி ஆணையர் மறுக்கிறார். இது கண்டிக்கத்தக்கது.
இன்னும் 6 மாத காலத்திற்கு கடைகளுக்கு சீல் வைப்போ, வியாபாரிகளுக்கு அபராதமோ, சோதனை என்ற பெயரில் லஞ்சம் வாங்குவது போன்ற செயலிலோ அதிகாரிகள் ஈடுபடக்கூடாது. பெயர் பலகைகளில் தமிழுக்கு முன்னுரிமை அளித்து 10% ல், 5% இடத்தில் தமிழில் எழுத வணிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். ஜிஎஸ்டி கட்டுவதில் அதிக குளறுபடி உள்ளது. அதை அகற்றினால் தான் முறையாக ஜிஎஸ்டி தொடர்ந்து கட்ட முடியும்.