தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருப்பத்தூர் அருகே வனவிலங்கு அச்சுறுத்தல் - பொதுமக்கள் அச்சம் - ஜோலார்பேட்டை மர்ம விலங்கு தாக்குதல்

திருப்பத்தூர்: ஏலகிரி அருகே வன விலங்கு கடித்து இரண்டு ஆடுகள் பலியானதை தொடர்ந்து, அந்த விலங்கை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

thiruppattur-unknown-animal-eating-goats-cause-people-in-fear-ongoing-out-in-nights
மர்ம விலங்கு தாக்குதலால் மக்கள் வெளியே செல்ல அச்சம்!

By

Published : Feb 6, 2020, 12:00 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகரில், விவசாயி ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான ஆட்டு கொட்டகைக்குள் ஆடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று முன் தினம் (பிப். 04) இரவு கொட்டகைக்குள் நுழைந்த வன விலங்கு ஒன்று, இரண்டு ஆடுகளை கடித்துக் கொன்றதுடன், சில ஆடுகளை காயப்படுத்திச் சென்றது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ், இது குறித்து திருப்பத்தூர் வனத்துறைக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடம் சென்ற வனத்துறையினர், இரவு முழுவதும் அந்த கிராமத்தில் முகாமிட்டு வன விலங்கை பிடிப்பதாக உறுதியளித்தனர். இந்த சம்பவத்தால் அந்த கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மர்ம விலங்கு தாக்குதலால் மக்கள் வெளியே செல்ல அச்சம்!

இதையும் படியுங்க: நாட்டு வெடி குண்டுகளைக் கொண்டு வன விலங்குகளை வேட்டையாடியவர் கைது

ABOUT THE AUTHOR

...view details