வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கோடியூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையில் செல்போன் கடை நடத்திவருகிறார். நேற்று முன்தினம் காலை ரமேஷ் கடையை திறந்து வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.
செல்போன் கடையில் 65 ஆயிரம் ரூபாய் திருட்டு! - 65 ஆயிரம் திருட்டு
வேலூர்: செல்போன் கடையில் 65 ஆயிரம் ரூபாய் பணத்தோடு, விலையுயர்ந்த செல்போன்களையும் திருடிச் சென்ற இளைஞரை சிசிடிவி காட்சிகள் கொண்டு காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
செல்போன் கடையில் 65 ஆயிரம் ரோக்கப் பணத்தோடு திருட்டு!
அப்போது 20 வயதுடைய இளைஞர் ஒருவர், ரமேஷின் கடைக்குள் சென்று 65 ஆயிரம் ரூபாய் பணத்தோடு, விலை உயர்ந்த செல்போன்களையும் திருடிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, கடைக்கு திரும்பிய ரமேஷ் திருட்டு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின் கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.