வேலூர்:புலிக்குட்டி விற்பனைக்கு உள்ளது என ஸ்டேட்டஸ் வைத்த பார்த்திபன் என்பவரை வனத்துறை கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் வேலூர் பகுதிகளில் புலிக்குட்டி ஒன்று விற்பனைக்கு உள்ளது என்ற புகைப்படத்துடன் கூடிய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸின் நகல் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில் இந்த ஸ்டேட்டஸ் வேலூர் வனத்துறையினரின் பார்வைக்குச்சென்றது. இதனையடுத்து அந்த ஸ்டேட்டஸை வைத்தவர் காட்பாடியைச் சேர்ந்த பார்த்திபன் என்பது தெரியவந்தது.
பார்த்திபன் அந்த ஸ்டேட்டஸில், 'பிறந்து மூன்று மாதங்களான புலிக்குட்டி விற்பனைக்கு உள்ளது. புக் செய்தால் 10 நாட்களில் டெலிவரி செய்யப்படும். புலிக்குட்டியின் விலை ரூ.25 லட்சம்', எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து வேலூர் வனத்துறையினர் இவரை கைது செய்துள்ளனர்.