தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தொப்புள் கொடி அறுக்காத நிலையில் வீசி எறியப்பட்ட பெண் சிசு! - வேலூரில் பிறந்த குழந்தையை எறிந்த பெற்றொர்

வேலூர்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் பெண் சிசு கழிவுநீர் கால்வாயில் வீசி கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

baby was killed in vellore

By

Published : Nov 22, 2019, 3:47 PM IST

வேலூர் மாவட்டம் மேல்விஷாரத்தை அடுத்த தஞ்சாவுரான் காலனி பகுதியில் வழக்கம்போல் இன்று காலை சிலர் நடைபயிற்சி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் பெண் சிசு ஒன்று சடலமாகக் கிடந்துள்ளது.

வேலூரில் கழிவுநீர் கால்வாயில் இறந்து கிடந்த குழந்தை

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து ஆற்காடு நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆற்காடு நகர காவல் துறையினர் கால்வாயில் வீசப்பட்டு இருந்த பெண் சிசுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தை உடல் சிறிதளவு அழுகிய நிலையில் இருப்பதால் குழந்தை வீசப்பட்டு ஓரிரு தினங்கள் ஆகி இருக்கலாம் என்று தங்களது முதல் கட்டவிசாரணையில் தெரிவித்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

அசிங்கப்பட்ட அமைச்சர்கள்! ஆத்திரமடைந்த ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details