தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.5 கோடி மோசடி: அரசு பள்ளி ஆசிரியை கைது!

அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.5 கோடி மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியை, மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அரசு பள்ளி ஆசிரியை கைது
அரசு பள்ளி ஆசிரியை கைது

By

Published : Dec 3, 2021, 7:56 PM IST

வேலூர்:கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் மகேஸ்வரி (53), அவரது கணவர் ஓய்வு பெற்ற துணை ஆய்வாளர் தர்மலிங்கம் (59), தோட்டப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை லதா (55) ஆகிய 3 பேரும், வேலூர் தொரப்பாடி ஜீவா நகரைச் சேர்ந்த மலர்க்கொடி (50), கொசப்பேட்டையை சேர்ந்த தமிழ்செல்வி (59), காட்பாடி திருநகர் விவேகானந்தர் நகரைச் சேர்ந்த ஜான்சிராணி (45) ஆகியோருக்கு அறிமுகமாகியுள்ளனர்.

இந்நிலையில், மலர்க்கொடி, தமிழ்செல்வி, ஜான்சிராணி ஆகியோரிடம் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசிரியை மகேஸ்வரி இவரது கணவர் தர்மலிங்கம், ஆசிரியை லதா ஆகியோர் பணம் பெற்றுள்ளனர்.

அதன்படி, மலர்கொடியிடம் ரூபாய் 45 லட்சமும், ஜான்சிராணியிடம் ரூபாய் 2 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரமும், தமிழ்ச்செல்வியிடம் ரூபாய் 2 கோடியே 50 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. பணத்தைப் பெற்றுக்கொண்ட மூவரும் அதிக வட்டியும், அசல் தொகையும் கொடுக்கவில்லை என்பதால், அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட 3 பேரும் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்த நிலையில், விரைவில் பணத்தைத் தருவதாக மகேஸ்வரி, தர்மலிங்கம், லதா ஆகியோர் தட்டிக்கழித்து வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் பணத்தைக் கொடுக்க முடியாது என்று ஆசிரியை மகேஸ்வரி உள்பட 3 பேரும் மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதனால் மலர்கொடி உள்ளிட்ட பணத்தைக் கொடுத்த 3 பேரும் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் தனித்தனியாகப் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், மகேஸ்வரி, தர்மலிங்கம், லதா மற்றும் உடந்தையாக மகேஸ்வரியின் மகள்கள் 2 பேர் என மொத்தம் 5 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் இன்று (டிச.3) ஆசிரியை மகேஸ்வரியைக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் தலைமை மறைவாக உள்ள ஓய்வு பெற்ற தர்மலிங்கம், மற்றொரு ஆசிரியை லதா ஆகிய 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மகேஸ்வரி மகள்கள் இருவரும் முன்ஜாமீன் பெற்று உள்ளதால் அவர்களை காவல்துறையினர் கைது செய்யவில்லை.

இதையும் படிங்க:Gold Rate: ஏறுமுகத்தில் தங்கம் விலை

ABOUT THE AUTHOR

...view details