பேர்ணாம்பட்டு பகுதியில் கடத்தப்பட்ட 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்! - seized 3 tonne ration rice
பேர்ணாம்பட்டு பகுதியில் கடத்தப்பட்ட 3 டன் ரேசன் அரிசியை பறிமுதல்செய்த உணவுப் பொருள் பாதுகாப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
வேலூர்: பேர்ணாம்பட்டு ஏரிகுத்தி கிராம பகுதியில் ரேசன் அரிசி கடத்துவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வேலூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுலர் காமராஜ் தலைமையில் பறக்கும் படை தனி வட்டாட்சியர் கோட்டீஸ்வரன் மற்றும் குழுவனர், பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் கோபிநாத், பேர்ணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் சிவசண்முகம், உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை ஆய்வாளர் செல்வகுமார், குழுவினர் ஆகியோர் நேற்று (ஜூன் 25) ஏரிகுத்தி கிராம பகுதியில் சோதனைசெய்தனர்.
அப்போது ஆம்பூர் வழியாகச் செல்ல இருந்த தமிழ்நாடு பதிவெண் கொண்ட மினி லாரியை பிடித்து சோதனை செய்ததில், சுமார் 3 டன் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. மேலும் ஓட்டுநர் தப்பி ஓடியதைத் தொடர்ந்து அரிசியை பறிமுதல்செய்து வேலூர் தொரப்பாடியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.
இது குறித்து உணவுப் பொருள் பாதுகாப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.