வேலூர்:காட்பாடி அடுத்த குகையநல்லூர் கிராத்தில் "செயின்ட் ஜோசப் கருணை இல்லம்" என்ற பெயரில் தனியார் தொண்டு நிறுவனத்தின் கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், சரியான உணவு, தங்குமிட வசதி இல்லை என புகார் எழுந்தது.
இந்நிலையில், இதுகுறித்து வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி தலைமையில் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், சமூகநலத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கருணை இல்லத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த இல்லத்தில் 37 ஆண்கள், 32 பெண்கள் என மொத்தம் 69 பேர் தங்கியிருப்பதும், அவர்களுக்கு உரிய வசதிகள் இல்லாமல் துன்புறுத்தப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கிருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, வாலாஜா அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது 8 பேர் மட்டும் தங்கியுள்ளனர். அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தின் மேற்பார்வையாளராக பாதிரியார் தாமஸ் என்பவரும், பொறுப்பாளராக சாந்தி என்பவரும் இருந்து வருகின்றனர். இந்த இல்லம் உரிய அனுமதியின்றி இயங்குவதாக தெரியவந்துள்ளது.