வேலூர்: காட்பாடி அடுத்த அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தினக்கூலியாகவும், நிரந்தர பணியாளர்களாகவும் 10 முதல் 30 ஆண்டுகள் வரை பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு, பணிக்கொடை வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பணிக்கொடை வழங்காததைக் கண்டித்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - Vellore Cooperative Sugar Mill
வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்காததைக் கண்டித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சர்க்கரை நுழைவு வாயில் முன்பு அறப்போராட்டம் நடத்தினர்.
ஆனால் ஆலை நிர்வாகம் இதுவரை அவர்களுக்கு தேவையான பணிக்கொடை சுமார் இரண்டு கோடி ரூபாய் வரை நிலுவைத்தொகை இருப்பதாகவும் ஆலை நிர்வாகம் அதனை கண்டுகொள்ளவில்லை எனவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அவர்களின் குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சுமார் இரண்டு கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கூட்டுறவு சர்க்கரை ஆலை நுழைவுவாயில் முன்பு இன்று (ஜூன் 23) அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.