தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

25 நாள் உண்ணாவிரதத்தை முடித்தார் முருகன்!

வேலூர்: மனைவி நளினியுடன் பேச அனுமதி மறுக்கப்பட்டதற்காக சிறையில் 25 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த முருகன், மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று கைவிட்டார்.

case
case

By

Published : Dec 17, 2020, 12:30 PM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் கைதிகளாக வேலூர் ஆண்கள் சிறையில் முருகனும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசிக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனா அச்சத்தையடுத்து, முருகனும் நளினியும் வாட்ஸ்-ஆப் வழியே காணொலியில் பேசி வந்தனர்.

ஆனால், சிறைத்துறை அதிகாரிகள் வாட்ஸ்-ஆப்பில் பேச அனுமதிக்கவில்லை என்று கூறி, கடந்த 25 நாட்களாக சிறையிலேயே முருகன் உண்ணாவிரதம் இருந்து வந்தார். முருகனின் உடல்நிலை கடந்த இரண்டு நாட்களாக மோசமடைந்ததை அடுத்து, அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று தற்போது இளநீர் குடித்து முருகன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

இதையும் படிங்க: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: ஹேம்நாத்திடம் ஆர்டிஓ விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details