முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள தனது மனைவி நளினியுடன், காணொலி அழைப்பில் பேச அனுமதிக்கக்கோரி கடந்த ஜூன் 1ஆம் தேதி தொடங்கி 11ஆவது நாளாக இன்றும் (ஜூன் 11) உண்ணாவிரதம் மேற்கொண்டுவருகிறார்.
நளினி, முருகனின் சந்திப்பு மாதம் ஒருமுறை நடைபெற்றுவந்தது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், அவர்களது சந்திப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.